அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை…சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை…சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று  தமிழகப் பகுதியில் சந்தித்துக் கொள்வதால் மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வரும் 5-ஆம் தேதி வரைநீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ttn

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று  தமிழகப் பகுதியில் சந்தித்துக் கொள்வதால் மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 

ttn

அதன்படி என்றுமே இல்லாத புத்தாண்டாக நேற்றைய தினம் சென்னையில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.