அஜித்தின் ரசிகர் திடீர் தற்கொலை!
Feb 24, 2021, 22:06 IST1614184603000
நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகரான பிரகாஷ் என்பவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். தல என அன்போடு அழைக்கப்படும் இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ், இன்று தற்கொலை செய்துகொண்டார். பிரகாஷ் தனது உடலில் பல இடங்களில் அஜித் பெயர், my god ajith என பல வாசகங்களை பச்சை குத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, வீட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு பதிலாக விசுவாசம் படத்தின் அஜித் ஸ்டில்ஸ்களை ஒட்டி கடவுளாக நினைத்துவருகிறார். ஆனால் திடீரென அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவில்லை. இந்த நிலையில் அஜித்தின் ரசிகர்கள் #RIPPrakash என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தங்களது இரங்கலை அதில் தெரிவித்துவருகின்றனர்.