குதிரையில் Zomato டெலிவரி!

 
குதிரையில் Zomato டெலிவரி! 

சென்னை ஈசிஆர் பாலவாக்கம் பகுதியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


சென்னை பாலவாக்கம் புறநகர் பகுதியில் Zomato டெலிவரி பார்ட்னர் ஒருவர் உணவை குதிரையில் சென்று டெலிவரி செய்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. டிராஃபிக், சாலை பிரச்சனை என எதுவாக இருந்தாலும் "உணவு சரியான நேரத்தில் போய் சேரனும்" என்ற அர்ப்பணிப்போடு இப்படி குதிரையில் கிளம்பிட்டாரு, பெட்ரோல் தேவையில்ல, EMI இல்ல, சர்வீஸ் செலவு இல்ல, பார்கிங் பிரச்சனை இல்ல, இப்போதைய விலைவாசிக்கு "குதிரை டெலிவரி" தான் பெஸ்ட் பிசினஸ் மாடல் போல , டிராஃபிக்ல மாட்டாது, மைலேஜ் கவலை இல்ல, "வைக்கோல் போட்டா" போதும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.