ஏஐ தாக்கம் எதிரொலி- ஸோஹோவில் இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை

 
Zoho srothar vembu

ஏஐ தாக்கம் எதிரொலியால் ஸோஹோவில் இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மென்பொருள் தயாரிப்பு, சாப்ட்வேர் டெஸ்டிங், வாடிக்கையாளர் சேவை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளில் AI அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிறுவனங்களுக்கு சில நன்மைகள் கிடைத்தாலும், ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலப் பணிச்சூழல் குறித்த கவலைகளும் அதிகரிக்கின்றன. முன்பு பல ஊழியர்கள் செய்துவந்த அடிப்படை கோடிங், சாப்ட்வேர் டெஸ்டிங், டாக்குமென்டேஷன் போன்ற பணிகளை AI விரைவாகச் செய்ய முடியும். இதனால் குறிப்பாக புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸோஹோ ஊழியர்களுக்கு இந்தாண்டு வழக்கமான சம்பள உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டதால் பணியாளர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். கடந்த 18 மாதங்களாக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. மென்பொருள் துறையின் வணிகச் சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாலும், செய்யறிவு பயன்பாடு அதிகரிப்பதால் நிறுவனச் செலவுகள் உயர்ந்ததாகவும் ஸோஹோ குறிப்பிட்டுள்ளது. தரவு மையங்களுக்கான சர்வர்களின் விலை 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சவாலான புவிசார் அரசியல் சூழலும் நிறுவனத்தைப் பாதிப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளா. பெருமளவிலான ஆட்குறைப்பைத் தவிர்க்க தீவிர முயற்சி மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.