ஜிம்பாப்வே டாலருக்கு பதிலாக புதிய நாணயம் அறிமுகம்..!

 
1

ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளது. இதையடுத்து அங்குள்ள ஜிம்பாப்வே டாலருக்கு பதில் நேற்று முன்தினம் புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன.


ஏப்ரல் மாதமே இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது மக்கள் பயன்படுத்தும் வகையில் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.