எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு
Updated: Jul 5, 2025, 11:22 IST1751694773075
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம். ஏற்கனவே Y பிளஸ் பாதுகாப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, தற்போது Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி ஈபிஎஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், அதிமுகவினரின் கோரிக்கையை ஏற்று Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Z+ பிரதமருக்கு அடுத்தபடியான உயர்ரக பாதுகாப்பு என்பது குறிப்பிடதக்கது.


