"மக்கள் சந்தோஷத்துக்காகத்தான் வீடியோ போடல"- ரீல்ஸ் மதுமிதா மீண்டும் அலப்பறை
நாகர்கோவில் யூடியூபர் மதுமிதாவின் இன்ஸ்டா வீடியோவால் அவரது வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை போன நிலையில், மீண்டும் அவர் வீடியோ ‘ரிலீஸ்’ செய்திருக்கிறார்.
நாகர்கோவில் யூடியூபர் மதுமிதாவின் இன்ஸ்டா வீடியோவால் அவரது வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை போன நிலையில், மீண்டும் அவர் வீடியோ ‘ரிலீஸ்’ செய்திருக்கிறார். வழக்கம்போல் நகைகளை அணிந்து குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய மதுமிதா, 'எனக்கு எண்டே கிடையாது, எங்களை யாராலும் அழிக்க முடியாது' எனப் பேசியுள்ளார்.
எங்க அழிக்க யாராலும் முடியாது Video வெளியிட்ட மதுமிதா#madhumitha #youtubermadhumitha #madhumithaissue #arrowroots pic.twitter.com/sBdYw0bmM4
— Arrowroots Media (@arrowrootsmedia) November 2, 2026
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்த்து 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் ஒரு மாதமாக வீடியோ போடாதது குறித்து மதுமிதா விளக்கம் அளித்துள்ளார் "என் வீட்டில் நகை திருடுபோனதை நினைத்து மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள்; அந்த மகிழ்ச்சி கெடக்கூடாது என்பதால் தான் வீடியோ போடவில்லை" என கூறியுள்ள அவர், ஒரு பெண் வளர்ச்சி அடைந்தால் அவதூறுகள் வருவது இயல்பு என சீதை மற்றும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.

