யூடியூபர் மதுமிதா மீது நெல்லையில் திருட்டு வழக்குப்பதிவு
நாகர்கோவிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா மீது நெல்லையில் திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூடியூபர் மதுமிதா மீது நெல்லை காவல் நிலையத்தில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேடிசி நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து, தன்னிடம் 5 சவரன் நகையை மதுமிதா பறித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அளித்த புகார், நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (வயது 28). பிரபல பெண் யூடியூபரான இவர் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவரது வீட்டில் கடந்த மாதம் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து என்பவர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். என்பது குறிப்பிடதக்கது.

