யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி பலி

 
இர்பான்

பிரபல யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai youtuber stopped his marriage - தமிழ் News - Time News

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி(55). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில்  செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார். பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்க்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது விலை உயர்ந்த Benz கார் வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியது.

இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதி வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் (34) மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அது பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பதும், இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.