மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

 
tn

யூடியூபர் இர்பான்  துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டு, அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததுடன், அதை வீடியோவாக எடுத்து தனது You tube Channal-ன் மூலம் வெளியிட்டுள்ளார்.  இந்த சூழலில்  இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக  இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

வீடியோ
இந்நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்; மன்னிப்புக்கோரி யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்தியதால், இர்ஃபானிடம் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் கேட்ட நிலையில் மன்னிப்பு கோரினார். முன்னதாக  சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூபர் இர்பான் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.