சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்- யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது

 
திவ்யா கள்ளச்சி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் சித்ரா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூபர் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இப்புகார் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா கள்ளச்சி, இவர் ஒரு யூடியூபர் ஆவார். இவரும் இவரது நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அத்திகுளம் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். இதில் கார்த்தி என்பவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சித்ராவின் நண்பராக உள்ளார். இதனால் சித்ரா திவ்யா கள்ளச்சி மற்றும் அங்குள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் கார்த்தி தனது நண்பரான ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மூலம் திவ்யா கள்ளச்சி  இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை வலையத்திற்குள் சித்ராவை கொண்டு வந்த போலீசார் கார்த்தி, ஆனந்த்  மற்றும் திவ்யா கள்ளச்சி ஆகிய மூவரிடமும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். 

பாலியல் சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்.. ஆதாரம் இன்றி அவதூறு என போலீசில் உதயா  சுமதி கம்பளைண்ட் | YouTuber Yuduber Udaya Sumathi Files Complaint with  Madurai Cyber Crime Police ...

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சித்ரா என்பவர் தான், திவ்யா கள்ளச்சியிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பதாக தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வருவதால் சிறுவர்களின் ஆபாச வீடியோ எடுத்த ஆனந்த் மற்றும் கார்த்தி இவர்களுக்கு தூண்டுகோலாக செயல்பட்ட சித்ரா மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் தாக்கலில் ஈடுபட்ட திவ்யா கள்ளச்சி ஆகிய 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.