யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..!

தஞ்சாவூர் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா கள்ளச்சி. இவர் ஒரு யூடியூபர் . இவரும் இவரது நண்பருமான ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அத்திகுளம் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். இதில் கார்த்தி என்பவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சித்ராவின் நண்பராக உள்ளார். இதனால் சித்ரா திவ்யா கள்ளச்சி மற்றும் அங்குள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி கார்த்தியிடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கார்த்தி தனது நண்பரான ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் ஆனந்த் மூலம் திவ்யா கள்ளச்சி இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை வலையத்திற்குள் சித்ராவை கொண்டு வந்த போலீசார் கார்த்தி, ஆனந்த் மற்றும் திவ்யா கள்ளச்சி ஆகிய மூவரிடமும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். சித்ரா என்பவர் தான், திவ்யா கள்ளச்சியிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பதாக தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வருவதால் சிறுவர்களின் ஆபாச வீடியோ எடுத்த ஆனந்த் மற்றும் கார்த்தி இவர்களுக்கு தூண்டுகோலாக செயல்பட்ட சித்ரா மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் தாக்கலில் ஈடுபட்ட திவ்யா கள்ளச்சி ஆகிய 4 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.