உடல் எடை குறைப்பு ஆபரேஷனில் இளைஞர் பலி - இணை இயக்குநர்கள் குழு அமைப்பு!!

 
tn

புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன்.  இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன்  பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார்.  26 வயதான ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி நேற்று முன்தினம்  ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.  கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

tn

ஹேமசந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது தொடர்பாக சென்னை பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது  குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

tn

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த ஹேமசந்திரன் என்ற இளைஞர் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை மருத்துவத்துறை அமைத்தது.