காவலர் கன்னத்தில் அறைந்த இளைஞர்- விசிகவினரின் சாலை மறியலில் பரபரப்பு

 
ச்

விசிக பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையும் மீறி பைக்கில் செல்ல முயற்சித்த இளைஞருடன் விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


விசிக பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையும் மீறி பைக்கில் செல்ல முயற்சித்த இளைஞருடன் விசிகவினர் வாக்குவாதம் செய்தனர். இதை தடுக்க வந்த காவலருக்கும் இளைஞருக்கும் இடையே வெடித்த வார்த்தை மோதல் வெடித்தது.  அப்போது அந்த இளைஞர் ஒருமையில் வார்த்தையை விட்டதும், காவலர் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அந்த இளைஞரும் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த இளைஞரை கைதுசெய்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.