முன்பகை காரணமாக இளைஞர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை

 
death

திண்டுக்கல் அருகே  முன்பகை காரணமாக இளைஞர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு-மோதரயில் இராணுவச் சிப்பாய் பலி - Pearl One News

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (எ) ராக்கேஷ். இவரது தந்தை மாணிக்கம். திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி செட்டிக்குளத்தில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார். இதனிடையே  கடந்த 2 ஆம் தேதி  இரவு குளத்தில் காவல் காத்துக் கொண்டு இருக்கும் பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  ராக்கேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராகேஷை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே ராக்கேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலில் ஆறு இடங்களில் புல்லட் பாய்ந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குளத்தை மீன்பிடிக்க ஏலம் எடுப்பதில்  முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.