தீக்குளித்த இளைஞர் ராஜ்குமார் உயிரிழப்பு

 
gummudipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தீக்குளித்த இளைஞர் ராஜ்குமார் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறினார்.  எனினும் அவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் வீட்டை இடிக்க முயன்றனர்.

 இதனால் மனமுடைந்த அவர்  வீட்டுக்குள் சென்று மண்ணெணெய்யை  தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவர் மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

85% தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.