உயர் சாதி பெண்ணை காதலித்த பட்டியலின இளைஞர் கொலை?

 
Murder

ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சி காலணி பகுதியை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞரான கதிர்வேல் என்பவர், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் என்பதால், அந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று கதிர்வேலுக்கு அவரது காதலி போன் செய்து பார்க்க அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி அவர் அழைத்த இடத்திற்கு சென்ற கதிர்வேலை, பெண் வீட்டார் அடித்துக் கொலை செய்து அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இதனால் கதிர்வேலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராக இருந்துக் கொண்டு காதலித்த ஒரே காரணத்திற்காக ஆதிக்க சாதியினரால் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.