கடலூர் அருகே இடி தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

 
பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

கடலூர் அருகே இடி தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார், மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..

மேற்கு திசை காற்றின் வேகப்பாடு காரணமாக அடுத்த  ஒரு வாரம் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய ஒரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை பரவலாக இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த கண்ணன்(19) என்பவர் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குள்ளஞ்சாவடி அருகே ராமநாதகுப்பம் பகுதியில் மழைக்காக ஆலமரத்தின் கீழ் ஒதுங்கி இருந்தவர்கள் மீது இடிதாக்கியதில் மரத்தின் கீழ் இருந்த தம்பதியினர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் ஐந்து பேரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.