காலாவதியான மதுபானம் குடித்த இளைஞர் உயிருக்கு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் காலாவதியான மதுபானத்தை குடித்ததாக இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கி (34). இவர் இன்று சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் மதுபானக்கடையில் மது வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்திய அடுத்த சில நிமிடங்களில் அவரது வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே தான் குடித்த மதுவை பார்த்தபோது மதுபானம் கடந்த 2022 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. மதுபானங்கள் பொதுவாக 3 மாத காலம் முதல் 1 ஒரு வருட காலம் வரையை இருக்கும். ஆனால் இசக்கி அருந்திய மதுபானம் மூன்று ஆண்டுகள் ஆனதாக இருந்ததால் இசக்கியுடன் வந்த நபர் அவரை உடனடியாக அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மெயில் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


