போதை ஊசியால் இளைஞர் பலி!
Jun 30, 2026, 16:33 IST1782817432825
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கழிப்பறையில் போதை ஊசி செலுத்திய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்மந்தை காலனியை சேர்ந்த ராஜ மாணிக்கம் (22), பொது கழிப்பறைக்கு சென்று போதை ஊசி செலுத்தி கொண்டுள்ளார். இதனையடுத்து சற்று நேரத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் 8ஆம் தேதி நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

