நாய் போல் கத்தி, சுருண்டு படுத்த இளைஞர்! நாய் கடியால் பறிபோன மற்றொரு உயிர்

 
சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

திருவாரூர் அருகே தெரு நாய் கடித்து சிகிச்சை பெறாமல் அலட்சியம் காட்டியதால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அமுதா. இவர்களது  மகன் ஆகாஷ் (வயது 22). ஜெயக்குமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் ஆகாஷ் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஆகாஷ் காலில் கடித்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு நாய் கடிக்கு உரிய எந்த சிகிச்சையும் ஆகாஷ் முறைப்படி செய்து கொள்ளவில்லை. நாய் கடித்தது குறித்தும் அலட்சியமாக அது பற்றி வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். 

இந்த நிலையில் ஆகாஷின் நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாக வித்தியாசமாக இருந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர்.அவர் நாய் போல் கத்துவது,  ஓடிப் போய் சுருண்டு கீழேபடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து பதறி போன ஆகாஷின் தாய் மற்றும் சகோதரர்கள் உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது நாய்க் அவருடைய உடலை சுகாதாரத்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

Advertisement

TVR DOG BITE YOUTH DEATH