காதலி பேச மறுத்ததால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 
இரட்டை ரயில் பாதை பணி: மதுரைக்கு செல்லாமல்  மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்..

சென்னையில் காதலி பேச மறுத்ததால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth commits suicide by jumping in front of train

சென்னை தாம்பரத்தில் இருந்து  திருநெல்வேலி சென்ற அந்தோதியா விரைவு ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே செல்லும்போது இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து  படுத்து
தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் கூடுவாஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் பரணி (வயது 19) என்பது தெரிய வந்தது

பத்தாம் வகுப்பு வரை படித்த பரணி கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையானதும், இதற்காக போதை மறுவாழ்வு மையத்தின் சிகிச்சை பெற்று சமீபத்தில் அங்கிருந்து வந்தததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  பரணியின் தவறான பழக்கத்தால் அவர் காதலித்த பெண் அவரிடம் பேச மறுத்ததால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.