FQL ஆன்லைன் முதலீடு மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

 
ச்

கோடிக்கணக்கில் ஆன்லைன் செயலி மூலம் நடந்த மோசடியில் தமிழ்நாடு காவல்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், FQL Exchange மற்றும் VG Investment போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் திண்டுக்கல்லில் FQL ஆன்லைன் முதலீடு மோசடி காரணமாக பணம் இழந்த விவசாயி விபரீத முடிவு எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. FQL ஆன்லைன் ஆப்பில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த விவசாயி ராஜ்  உயிரை மாய்த்து கொண்டார். FQL ஆன்லைன் முதலீடு மோசடி குறித்து காவல் நிலையங்களில் குவியும் ஆயிரக்கணக்கான புகார்களால் அதிர்ச்சி நிலவுகிறது.