ஒரே நாளில் ரூ.1.13 ஆயிரம் கோடிக்கு அதிபதியான இளைஞர்..!

 
1

நொய்டாவை சேர்ந்தவர் தீபக். இவருக்கு வயது 20. இவரது தாயார் 2 மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரது தாயாருக்கு கோடக் மகேந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தது. இந்த நிலையில் அந்த சேமிப்பு கணக்கு எண் தீபக் கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில், வங்கியில் இருந்து தீபக்குக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது தாயார் வங்கி கணக்குக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.குறிப்பாக 13 இலக்கத்தில் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. இதனால் திகைத்துப் போன தீபக், மெசேஜை சரி செய்து பார்த்தார். அப்போது தனது தாயார் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் தீபக்.

மேலும் அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் தீபக் பரவ விட்டார். அத்துடன் மறுநாள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில் சென்று கேட்டு பார்த்த போது தவறுதலாக தீபக்கின் தாயார் வங்கி கணக்குக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இருப்பினும் யாரிடமிருந்து அந்த தொகை வந்தது என்ற விவரம் வெளி வரவில்லை. இது தொடர்பாக வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தீபக் சமூக வலைதளத்தில் பரப்பிய ஸ்கிரீன்ஷாட் வைரலாக பரவியது.

ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கே மொத்த சொத்து கணக்கு என்று பார்த்தால், 7,500 கோடி ரூபாய் தான் இருக்கிறது. ஆனால் தீபக்குக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வரவு வைக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.