"பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் சரத்குமார் அல்ல"- தவெக மாவட்ட செயலாளர்

 
ப்ன்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின்  மாநாட்டின் போது பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் இல்லை என பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞர் சரத்குமார் தன்னுடன் பேசிய செல்போன் உரையாடல் ஆடியோவை பத்திரிகையாளர் முன்னிலையில் ஆதாரமாக வெளியிட்டு TVK மாவட்ட செயலாளர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ப்ஜ்ந்

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார்  என்ற தொண்டர் பவுன்சர்களால்  தூக்கி வீசப்பட்டதாக  எழுந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் த.வெ.க தொண்டர் சரத்குமாரின் தாய் சந்தோசம் என்பவர் பவுன்சர்களை கண்டித்து தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தனது தாய் பேசியது உண்மை இல்லை என்று சரத்குமார் பேசிய வீடியோ வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் தூக்கி வீடப்ப்பட்டதாக கூறப்படும் இளைஞர் நேற்று தனது தாயுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மற்றும்  பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து மாவட்ட காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பவன்சர்கள் 10 பேர் உள்ளிட்ட 11 பேர் மீது குன்னம் போலீஸார், நேற்று இரவு ,ஆபாசமாக திட்டுதல். கூட்டமாக சேர்ந்து தாக்குதல், மற்றும் தள்ளி விடுதல் உள்ளிட்ட  3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ,த.வெ.க தலைமை உத்தரவின் பேரில் அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மாநாட்டில் த.வெ.க தொண்டர் யாரும் தாக்கப்பட வில்லை பெரம்பலூரில் சரத்குமார் என்ற இளைஞரின் செயல்பாடு பிறரது தூண்டுதலின் பேரில் நடைபெற்றுள்ளது என்று விளக்கம் அளித்தார் . மேலும் சரத்குமார் காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்கு முதல்நாள் தன்னுடன் பேசிய செல்போன் உரையாடலின் ஆடியோ ஆதாரத்தை காட்டி மறுப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் நேற்று காவல்துறையினரிடம் புகார் அளிக்க வந்த சரத்குமார் பவுன்சர்கள் தன்னை தூக்கி வீசியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறியது குறிப்பிடதக்கது.

 கட்சி தொண்டர்  ஒருவரை பவுன்சர்கள் இழுத்து தள்ளிவிடும் காட்சி வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ள நிலையில் , தற்போது தாக்கப்பட்டதாக கூறப்படும் சரத்குமார் என்ற இளைஞர் முன்னுக்கு பின் முறனாக பேசி வருவது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக த.வெ.க தரப்பில் எதிர் புகார் மனு கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு தலைமையிடமிருந்து உத்தரவு வந்தால் காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக 

TV K மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.