போலி பில் மூலம் ஸ்டார் ஹோட்டலில் தங்கி சொகுசை அனுபவித்த இளைஞர் கைது

 
போலி பில் மூலம் ஸ்டார் ஹோட்டலில் தங்கி சொகுசை அனுபவித்த இளைஞர் கைது

இந்தியா முழுவதும் போலியான பில் கொடுத்து 5 நட்சத்திர விடுதிகளில் தங்கி சொகுசை அனுபவித்த ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டார். 

போலி பில் மூலம் ஸ்டார் ஹோட்டலில் தங்கி சொகுசை அனுபவித்த இளைஞர் கைது

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்தவர் போராடா சுதிர் (25). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர் ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்தி அறையை புக் செய்ததாக கூறி போலியான பில்லை காட்டியுள்ளார். இதையடுத்து அவரை விடுதியினர் தங்க அனுமதித்தனர். பின்னர் மறுநாள் விடுதியை காலி செய்து செல்ல முயன்ற போது ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போம் அவர் போலி பில்லை காட்டி தான் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டதாக கூறியுள்ளார். அப்போது மீண்டும் சோதனை செய்த போது அது போலியான பில் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து விடுதி ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் சுதிரை கைது செய்தனர். விசாரணையில் சுதிர் பொறியியல் பட்ட படிப்பை பாதியில் நிறுத்தியதும், இந்தியா முழுவதும் உள்ள தாஜ், லீ மெரிடியன், போன்ற 5 நட்சத்திர விடுதிகளில் இவ்வாறு போலி பில் கொடுத்து சொகுசாக தங்கி இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இது போல போலி பில்லை காட்டி விடுதிகளில் தங்கியதாக மதுரை போலீஸார் இரண்டு முறையும், புவனேஷ்வர் போலீஸார் ஒரு என பல்வேறு மாநில போலீஸார் சுதிரை கைது செய்ததும் தெரியவந்தது. மேலும் சொகுசாக பல்வேறு வசதிகளை அனுபவிக்கவும், உணவு சாப்பிடவும் இந்த மாதிரியாக போலி பில்லை காட்டி தங்கி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து சுதிரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சுதிர் தங்கும் விடுதியில் யாராவத்திடம் கடனாக பணம் வாங்கி ஏமாற்றினாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.