“நீ என்ன போலீசா”- காது கூசும் அளவுக்கு தகாத பேச்சு... நடுரோட்டில் இளம் பெண்கள் ரகளை!

 
s

திருவள்ளூர் புழல் அருகே நடுரோட்டில் இரண்டு இளம் பெண்கள் வாகனத்தை இடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்து காவலரை தகாத வார்த்தையால் வசைபாடியதாகவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


இன்று மாலை புழல் காவாங்கரை சிக்னலில் GNT சாலையில் புழல் அருகிலுள்ள காவாங்கரையில் மதுபோதையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் ஒரு விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இடித்ததோடு நில்லாமல், போக்குவரத்தை நிறுத்தி, தட்டி கேட்போரிடமும், போக்குவரத்து போலீசிடமும் ரகளையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த டிராஃபிக் போலீசாரை பார்த்து “ நீ என்ன போலீசா” என கேட்டு ரகளை செய்த பெண்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், நடுச்சாலையில் போராட்டம் செய்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், மாற்றம் என்ற பெயரில் மிகவும் மோசமான நிலையை நோக்கி தமிழ்நாடு சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த விஷயத்தில் இரு பெண்கள் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.