கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றிக் கொலை - 6 பேர் கைது

 
a

சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நட்சத்திர பாரில் இரவு நேரத்தில் மதுஅருந்துவிட்டு நடனமாடிய போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் யான்சி, இளைஞர் பாலகுரு ஆகிய இருதரப்பினரும் பாரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பாரில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு தரப்பினரும் நடுரோட்டில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. பாலகுரு நண்பர் சுமன் சக்திவேல் கார் கண்ணாடி மீது யான்சியின் நண்பர்கள் கற்களை வீசி விட்டு இரு சக்கர வாகனத்தில் செல்ல முயன்றுள்ளனர். இரு சக்கர வாகனம் மீது பாலகுருவின் நண்பர் சுமன் சக்திவேல் தி.மு.க. கொடி கட்டிய காரை விட்டு மோதியதாக கூறப்படுகிறது.

இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இளம்பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த யான்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.