"விஜய் உடனே இங்கே வர வேண்டும்"- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் பீர் பாட்டிலுடன் இளம்பெண் ரகளை
விஜய் உடனே இங்கே வர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் பீர் பாட்டிலுடன் வந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்து பீர் பாட்டிலுடன் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தார்.மேலும், உடனடியாக விஜய்யை தான் பார்க்க வேண்டும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக இங்கே வர வேண்டும் என்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உடனடியாக பெண்கள் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் நிறத்திலான காவல் வாகனத்தை வரவழைத்து அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.அப்பொழுது அவருக்கு மனநிலை சரியில்லாத போது பேசியதாகவும், மேலும் ஊசி போன்ற போதை மருந்துகளை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நாடு எங்கே போகுது!!!
— RAMJI (@RAMJIupdates) May 13, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் பீர் பாட்டிலுடன் வந்த பென்
விஜய் எனக்கு உடனே இங்கே வர வேண்டும் ;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் பீர் பாட்டிலுடன் வந்த இளம் பெண் ரகளை
காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்… pic.twitter.com/R9cgCvb2am
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீர் பாட்டிலுடன் போதையில் வந்த இளம் பெண் முதல்வர் விஜயை உடனடியாக பார்க்க வேண்டும் என தகராறில் ஈடுபட்ட சம்பவம் சிறி து நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

