ரூ.8,000 கூப்பனால் இளம்பெண் தற்கொலை- திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது
Apr 15, 2026, 19:26 IST1776261410737
திருச்சி மண்ணச்சநல்லூரில் ரூ.8,000 கூப்பன் காரணமாக திமுகவினர் அவமானப்படுத்தியதாக பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வினியோகித்த ரூ.8000 போலிக் கூப்பனை தமக்கு ஏன் வழங்கவில்லை? என்று கூறி வாக்குவாதம் செய்த சிந்துஜா என்ற பட்டியலின இளம்பெண்ணை திமுகவினர் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, தாக்கியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம்பெண்ணை ஆபாசமாக பேசி தாக்கிய திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி-லால்குடி சாலையில் சுந்துவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.



