பேன்சி கடையில் நடந்த ’மைனர்’ திருமணம்- சிங்கப்பெண் படையை கண்டதும் ஓட்டம்

 
ச்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஃபேன்சி கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.


மதுரை மாவட்டம்  திருமங்கலத்தில் பேன்சி கடையில் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சிங்கப்பெண் அதிரடிப்படை நிகழ்விடத்துக்கு சென்றனர். ஆனால் சிங்கப்பெண் அதிரடிப்படை வருவதை அறிந்ததும் இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே சிறுமியை மீட்ட போலீசார், தப்பியோடிய இளைஞரை தேடிவருகின்றனர். விசாரணையில் அந்த சிறுமி பேன்சி கடையில் வேலை பார்ப்பவர் என்பது தெரியவந்துள்ளது.