இன்ஸ்டா பழக்கம்- 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி கழுத்தை அறுத்த 19 வயது இளைஞர்
Jan 27, 2025, 19:18 IST1737985734460

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த இளைஞர் தீபக் (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையைச் சேர்ந்த சினேகா (23) என்ற பெண்ணுக்கும் தீபக்-க்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது காதலை சினேகாவிடம் சொன்னபோது அவர் மறுத்ததால் அவர் வீட்டுக்கு சென்ற தீபக், சினேகாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சினேகா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒருதலைக்காதல் விவகாரத்தில் தீபக் என்ற இளைஞர் செய்த வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.