வீலிங் செய்துகொண்டே பைக்கில் வைத்து பட்டாசு வெடித்த இளைஞர்..!
இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோவாக எடுத்து அடுத்தவர்களை கவருவதற்காகவும், தங்களையும் திரைப்பட ஹீரோக்கள் போன்று காட்டி கொள்வதற்காகவும், லைக்குகள் பெறுவதற்காகவும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆபத்து விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என போலீசாரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆகையால் போலீசார், இரவு நேரங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண் கொத்தி பாம்பு போல் கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் முன்பு பட்டாசுகளை கட்டி வெடிக்கவிட்டபடி வீலிங் செய்த இளைஞர்..நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை


