யூட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!

 
tn

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே இயற்கை மருத்துவம் மீது கொண்ட ஆர்வத்தால் youtube வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததால்  இளம் பெண் உயிரிழந்துள்ளார். 

youtube

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த லோகநாயகியும், தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது.  லோகநாயகி கர்ப்பமாக இருந்த நிலையில் மாதேஷ் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல் இயற்கை மருத்துவம் மீதான நம்பிக்கையினால் மாதேஷ் மருத்துவமனைக்கு லோகநாயகி அழைத்துச் செல்லவில்லை என்று தெரிகிறது .இந்த சூழலில் நேற்று அதிகாலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ககுழந்தையை இயற்கை முறையில் பெற்று எடுக்க விரும்பிய மாதேஷ் youtube பார்த்து வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.  குழந்தை பிறந்த நிலையில் நஞ்சுக்கொடி வெளியேறாததால் லோகநாயகி சுயநினைவு இழந்துள்ளார்.

baby leg

இதையடுத்து குள்ளனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று லோகநாயகியை பரிசோதித்த  போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் லோகநாயகியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இளம்பெண் லோகநாயகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கணவர் மாதேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.