நீர் மோர் பந்தல் திறப்பீர்! துரை வைகோ வேண்டுகோள்

 
durai vaiko

 மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட வேண்டுமென  துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். 

durai

இதுதொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெயில் வாட்டுகிறது. இக்கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க உதவிடும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் நீர் மோர் பந்தல்களை அமைத்திட முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

tn

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளவாறு, நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட  தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.