நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் - கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்..!
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.
“நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்” என தெரிவித்துள்ள டி.கே.சிவக்குமார், குறைந்தபட்ச நாகரீகத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தங்கள் மாநில நிர்வாகத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்பிய நிலையில், டி.கே.சிவக்குமார் கடுமையான பதிலை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு தங்களுக்கென சொந்த நிர்வாகம் மற்றும் பிரச்னைகள் இருப்பதாகவும், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் விஜயின் கோரிக்கைக்கு கர்நாடக முதலமைச்சர் அளித்துள்ள இந்த பதில், இரு மாநில அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

