சிறுநீர் கழிக்க அண்ணா பல்கலை.யில் அனுமதி பெற வேண்டும்! தேர்வு அறை அதிகாரியின் உத்தரவால் மாணவி அதிரடி முடிவு

 
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி

செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம் 2 ஆம்  ஆண்டுபடிக்கும் மாணவி வசந்த பிரியா தேர்வின் போது சிறுநீர் கழிக்க டாக்டர் அம்பேத்கர் கட்ட  பல்கலைக்கழகத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என தேர்வு அறை அதிகாரி கூறியதால் தேர்வு எழுதுவதை மாணவி பாதியில்  கைவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பு – Government Law College Chengalpattu

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு எல்எல்எம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மறைமலை நகர் அருகே வாடகை வீட்டில் தங்கி செங்கல்பட்டு சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுத ஒரு மணி அளவில் கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நான்கு மணி நேரமாக சிறுநீர் கழிக்க முடியாத நிலை உள்ளது

மாலை மூன்று முப்பது மணி அளவில் சிறுநீர் கழிக்க தேர்வு மைய அதிகாரியிடம் தெரிவித்துள்ளார், அதற்கு அந்த அதிகாரி நீங்கள் சிறுநீர் கழிக்க சட்டக்கல்லூரி பல்கலைகழகத்தில் ஒப்புதல் சான்றிதழ் வாங்கி வந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியதால் அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக  தேர்வு எழுதுவதை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து விட்டார்

இதுகுறித்து மாணவி கூறுகையில், “நான் சிறுநீர் கழிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் ஒப்புதல் பெற வேண்டும் என கூறுகின்றனர். எனக்கு சிறுநீர் கோளாறு உள்ளது. இதன் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு எனக்கு அனுமதி தராததால் நான் தேர்வு அறையில் இருந்து எழுந்து வந்து விட்டேன், இதுபோன்று பல பிரச்சனைகள் பெண்களுக்கு உள்ளது, அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர். எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்