இந்த காரணத்துக்காக எல்லாம் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது: மும்பை ஐகோர்ட்..!!
2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியில், கணவர் விவாகரத்துகேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிஏ முடித்துள்ள அவர் தனது மனுவில், தனது மனைவியால் சமைக்க முடியவில்லை.
வீட்டு வேலைகளை சரியாகச் செய்ய முடியவில்லை. இவை எல்லாம் தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. திருமணச் சட்டத்தின் கீழ் இது அனைத்தும் கொடுமைக்கு சமம் எனத் தெரிவித்து இருந்தார்.
மனைவி தரப்பில், தன்னை பாத்திரம், கழுவுதல், சுத்தம்செய்தல், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் தன்னை செய்ய செய்ய வைத்ததாகவும், மீதமான உணவையும் உண்ண கட்டாயப்படுத்தியதாகவும் மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஆனால், ஜீவானம்சம் வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அமர்வு, விவாகரத்து உத்தரவை ரத்து செய்தனர்.மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருமணம் என்பது சமமான நபர்களின் கூட்டணி. இது சேவை ஒப்பந்தம் கிடையாது. மனைவியை வேலைக்காரியாக கருத முடியாது.
சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை செய்ய தவறுவது மட்டுமே மனரீதியான கொடுமையாகிவிடாது. அதனை கட்டாயமாக வீட்டு வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்

