இனி டாக்டர் சீட்டு இல்லாம மாத்திரை வாங்க முடியாது! மருந்து கடைகளுக்கு வரப்போகும் புது ரூல்ஸ்!

 
1

நாடு முழுவதும் அட்டவணை எச், எச்1, எக்ஸ் மருந்துகள் முறையான மருந்துச் சீட்டுகள் இல்லாமல் விற்பனையாவதாகப் புகார்கள் எழுந்தன.ஒரு சில மருந்துக் கடைகள் மருத்துவரின் பரிந்துரையின்றித் தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய மருந்துகள் போதைக்காகவும் உயிரை மாய்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுவதாகச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், மருந்து விநியோகத்தைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவதற்கான ஒரு கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கையாக இக்கட்டாய சிசிடிவி கண்காணிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தப் பரிந்துரை குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினர், பொதுமக்களிடமிருந்து மறுப்புகளையும் ஆலோசனைகளையும் மத்திய அமைச்சு கோரியுள்ளது.கருத்துகளையும் பரிந்துரைகளையும் சுகாதார, குடும்ப நல அமைச்சின் துணைச் செயலாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அட்​ட​வணை எச் மருந்​துகள் என்​பவை, பதிவுசெய்​யப்​பட்ட மருத்து​வரிட​மிருந்து பெறப்​பட்ட செல்​லுபடி​யாகும் மருந்துச்சீட்டின் மூலம் மட்​டுமே விற்​கக்​கூடிய மருந்​துகளாகும். அட்​ட​வணை எச்1 என்​பது அதன் துணைப் பிரி​வாகும்.