அசத்தல் திட்டம் : தினந்தோறும் ரூ.333 சேமிப்பதன் மூலம் ரூ.17 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

 
1

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் மிகவும் பிரபலமானது 'தொடர் வைப்பு' (RD) திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில், நீங்கள் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். தினந்தோறும் ரூ.333 சேமிப்பதன் மூலம் ரூ.17 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. 

தபால் நிலைய RD திட்டம் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும். அதில் நீங்கள் மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் தற்போது ஆண்டுக்கு 6.7 சதவீத நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம். இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் கணக்கைத் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட தங்கள் பெற்றோரின் உதவியுடன் கணக்கைத் திறக்கலாம்.

இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். நீங்கள் விரும்பினால், இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே மூடும் விருப்பமும் உங்களுக்கு உள்ளது.

நீங்கள் தினமும் ரூ.333 சேமித்தால், மாதத்திற்கு சுமார் ரூ.10,000 சேமிக்கலாம். இந்த தொகையை ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக RD கணக்கில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 6.7% வட்டி விகிதத்தில் உங்கள் மொத்த முதலீடு ரூ.6,00,000ஆக இருக்கும். நீங்கள் வட்டி மட்டும் ரூ.1,13,659 பெறுவீர்கள். 5 ஆண்டு முடிவில் நீங்கள் பெறும் மொத்த தொகை ரூ.7,13,659. இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு (மொத்தம் 10 ஆண்டுகள்) நீட்டித்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.12,00,000. 10 ஆண்டுகளில் நீங்கள் பெறும் மொத்த வட்டி ரூ.5,08,546. அதேபோல், 10 ஆண்டுகளில் நீங்கள் பெறும் மொத்த தொகை ரூ.17,08,546ஆக இருக்கும்.