இனி பிறருக்கும் ரயில் சீசன் டிக்கெட் புக் செய்யலாம்!

 
s

RailOne செயலியில், பதிவு செய்துள்ள ஒருவர் தமக்காக மட்டுமின்றி மேலும் 5 பேருக்கு சீசன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

RailOne செயலியில், பதிவு செய்துள்ள ஒருவர் தமக்காக மட்டுமின்றி மேலும் 5 பேருக்கு சீசன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். குடும்பத்தினர் அல்லது பிற பயணிகளுக்காகவும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். தமக்காக முன்பதிவு செய்யும் சீசன் டிக்கெட் அதே நாளிலேயே செல்லுபடியாகும்; பிறருக்காக முன்பதிவு செய்தால் அடுத்த நாளிலிருந்து செல்லுபடியாகும். 

யாருக்காக சீசன் டிக்கெட் பதிவு செய்கிறீர்களோ, அந்தப் பயணியின் புகைப்படம் மற்றும் QR குறியீடு டிக்கெட்டில் இடம்பெறும். பயணத்தின்போது அச்சுப் பிரதியையோ, மொபைலில் உள்ள PDF-யையோ காட்டலாம். முன்பதிவு ரசீது மட்டும் பயணத்திற்கு செல்லாது. செல்லுபடியாகும் சீசன் டிக்கெட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது.