நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம்!!

 
ration shop

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க உத்தரவிடப்பட்டது.

Ration shop

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், முழு கரும்பு  என பொங்கல் சமைக்க தேவையான பொருட்களும்,  மஞ்சள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,கடுகு ,சீரகம், மிளகு , கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு ,ரவை, கோதுமை மாவு,  உப்பு ஆகிய சமையல் பொருட்களும்  இவற்றுடன் ஒரு துணிப்பை என பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 4ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மாதந்தோறும் வாங்கி வந்த அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ration

இந்நிலையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மீண்டும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் தொகுப்பு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு என பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வண்ணம் நிறுத்திவைக்கப்பட்ட விநியோகமானது தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது சாமானியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.