ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்- போக்குவரத்துத்துறை

 
ஊரடங்கு - வாடகை ஆட்டோ ஊரடங்கு - வாடகை ஆட்டோ

ஆட்டோ ஓட்டுநகர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் ஆட்டோ ஓட்டுநர், பகலில் கல்லூரி மாணவன்... 10, 12ம் வகுப்புகளில்  தேர்ச்சிகூட ஆகாத ஆட்டோ ஓட்டுநரின் சாதனை கதை! - Tamil DriveSpark

கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச  ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதை திருத்தி அமைக்க வழக்கு தொடரப்பட்டு, தற்போது ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் 1.8 கி.மீட்டருக்கு ரூ.50 என நிர்ணயம் செய்துள்ளனர். கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.18 என்றும், இந்த புதிய கட்டண உயர்வு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்று போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போக்குவரத்துறை சார்பில் தெரிவித்த தகவலில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணம் உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டடார போக்குவரத்து அலுலவர்களிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.  இந்த புகாரின் அடிப்படையில் கூடுதலாக  கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை  என்றும் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் நாளை வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வழங்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement