பொதுத்துறை வங்கிகளில் வேலை... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
tt

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

IBPS  மூலம் 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள்  தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா. பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங் உள்ளிட்ட வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

bank

வயது - 20 வயது முதல் 28 

குடிமகன் - இந்திய, நேபால், பூட்டான் (திபெத்தியன் அகதியாக இருந்தால் சான்றிதழ் கட்டாயம் )

தேர்வு நடைபெறும் மாதம் - ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் 

தேர்வு நடைபெறும் இடம் - மும்பை 

jobs

தேர்வு முறை  - ப்ரீ தேர்வு, மெயின் தேர்வு (இதில் தேர்ச்சி பெற்றால்  அக்டோபர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் ) 

மொழி -  ஆங்கிலப்பாடம் தவிர மற்றவைகளை தமிழிலும் எழுத முடியும்.

தேர்வு கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு  ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 

விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.