10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
school

10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி அன்று பொதுத்தேர்வுக்கான  முடிவுகள் வெளியாகின. இத்தேர்வினை மொத்தமாக 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதினர்.  இதில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி அடைந்தனர். மொத்தமாக 78 ஆயிரத்து 706 பேர் தோல்வியடைந்தனர். தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை,  ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் இதற்கு மே 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியிருந்தது.

school

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 27ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஜூன் 27ஆம் தேதி மொழித்தாளும் , 28ஆம் தேதி ஆங்கில பாடமும் , ஜூன் 30-ம் தேதி கணித பாடமும்,  ஜூலை 1ம் தேதி விருப்பம் மொழி தாளும், ஜூலை 3ம் தேதி அறிவியல் பாடத்திற்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் ஜூன் 4ம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கு தேர்வுகள் நடைபெற உள்ளன.

schools leave

இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளின் வாயிலாகவும் , தனித் தேர்வுகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூபாய் 500 , 11ஆம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.