"அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை" - கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!!

 
K Annamalai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி குறித்து விமர்சித்து பேசிய அண்ணாமலை  " உதயநிதிக்கு பல்லு படாதது போல நெறியாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்" என கூறினார். இது மோசமான இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன்,  அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளன.

இதற்கு  திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி , அண்மையில் பாஜக தலைவர்  அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருந்தார்.

Annamalai

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும்  தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது 


அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம் என்று குறிப்பிட்டுள்ளார்.