குட் நியூஸ்..! நேற்று எகிறிய தங்கம் இன்று அதிரடி சரிவு!

 
Gold

சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி மாற்றம் கண்டு வருகிறது. இதற்கு சர்வதேச கமாடிட்டி சந்தைகளில் செய்யப்படுகிற டிரேடிங்குகளே காரணமாக இருக்கின்றன.

 

உதாரணத்திற்கு, இன்று கமாடிட்டி சந்தையில் டிரேடர்கள் தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்கினால், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும். 

 

தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.1,360 உயர்ந்தது. 

நேற்று (நவம்பர் 27) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.230 உயர்ந்து ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.1,840 உயர்ந்து ரூ.94,160-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கு விற்பனையானது.

இன்று (நவம்பர் 28) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.93,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.170-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.