"ராவணனாக மாஸ் காட்டும் யஷ்... கம்பீர ராமனாக ரன்பீர் கபூர்!" ராமாயணா படத்தின் 2வது டிரைலர் வெளியானது..!
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோவில் மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 30ம் தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது.பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
டிரெய்லரின் முதல் காட்சியே ராவணனான யாஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நேரடியாக இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. 2 பாகங்களாக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் 3டியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ramayana: Rise of Legend - New Trailer (Tamil) Mankind’s greatest story comes to life. From the visual artists behind The Odyssey and Dune watch the new trailer for RAMAYANA: RISE OF A LEGEND - exclusively in theatres, IMAX and Premium Large Formats worldwide November 5. https://t.co/1iTw8d2NAG
— The World Of Ramayana (@WorldOfRamayana) October 15, 2026
Ramayana: Rise of Legend - New Trailer (Tamil) Mankind’s greatest story comes to life. From the visual artists behind The Odyssey and Dune watch the new trailer for RAMAYANA: RISE OF A LEGEND - exclusively in theatres, IMAX and Premium Large Formats worldwide November 5. https://t.co/1iTw8d2NAG
— The World Of Ramayana (@WorldOfRamayana) October 15, 2026

