GPS நம்பி சென்ற இடத்தில் காத்திருந்த எமன்! தேனி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பரிதாப பலி!

 
11

கேரளாவில் இருந்து மதுரை சென்ற கார், கூகுள் மேப் காட்டிய மாற்றுப் பாதையில் சென்றபோது தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி..  இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி காரில் நான்கு பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் அருகே வந்துகொண்டிருந்தபோது, மதுரைக்கு செல்வதற்கான வழக்கமான பிரதான சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் (Google Maps) செயலி அவர்களுக்கு பெரியகுளம் - வத்தலகுண்டு மாற்றுப் பாதையை காட்டியதாக கூறப்படுகிறது.

லாரி மீது நேருக்கு நேர் மோதல்:

கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி, ஓட்டுநர் காரைப் பெரியகுளம் - வத்தலகுண்டு சாலையில் செலுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, எதிரே அதிவேகமாக வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் கொடூர தாக்கத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்:

இவ்விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் மக்களும் காவல் துறையினரும், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், காரில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காரில் இருந்த மற்ற மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குள்ளான வாகனங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதான சாலையை விடுத்து, கூகுள் மேப் காட்டிய குறுகிய மாற்றுப் பாதையில் சென்றதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.