Y பிரிவு பாதுகாப்பை ஏற்றார் விஜய்! மார்ச் 14 முதல் பாதுகாப்பு?

 
விஜய்

மார்ச் 14 முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  2 காவலர்கள், ஆயுதம் ஏந்திய ஒரு காவலரும் விஜய் எங்கு சென்றாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.  ஆனால் தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு மார்ச்  14 முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. Y பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றதால், இனி துணை ராணுவத்தினர் விஜய்யின் பாதுகாப்புக்காக உடன் இருப்பவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.